புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறாவளி காற்று புயல் போல் விசியதால் பல லட்சம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் மேகமூட்டத்துடன் சூறாவளி காற்று புயல் போல் வீசியுள்ளது. இதனால் கறம்பக்குடி ஒன்றியம், மறையூர் மேற்குபகுதி, மாங்கோட்டை, திருவரங்குளம் மற்றும் ஆலங்குடி ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட பல ஏக்கர் வாழைகள் காற்றால் முழுமையாக சாய்ந்து சேதமடைந்துள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சூறைக்காற்றால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.