Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு.. தொலைக்காட்சிகளில் நேரலை.. இத்தனை மில்லியன் பார்வையாளர்களா..?

பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரின் இறுதிச் சடங்கை தொலைக்காட்சி நேரலையில் சுமார் 14 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

பிரிட்டனில் கொரோனா தீவிரத்தை குறைக்க சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இதனால் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் பொது மக்கள் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் இறுதிச்சடங்கு தொடர்பான நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டிருந்தது.

இதன்படி, ITV நிறுவனமும் நேரலை செய்துள்ளது. இதனை சுமார் 2.1 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். மேலும் Sky தொலைக்காட்சியில் 4,50,000 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். ஆனால் Beep’s Live என்ற தொலைக்காட்சியில் சுமார் 11 மில்லியன் நபர்கள் பார்வையிட்டிருக்கிறார்கள்.

Categories

Tech |