கொரோனாவால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் அமல்படுத்த பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் தங்கி இருக்கும் போக்குவரத்து காவல் அதிகாரியான சக்திவேல் என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் சென்னையில் உள்ள ஸ்டாலின் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சக்திவேலுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். கடந்த ஆண்டு கொரோனா பரவலால் உயிர் இழந்தவர்களில் போலீசார் எண்ணிக்கை அதிகம். தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் காவல் துறையைச் சேர்ந்த சக்திவேல் உயிரிழந்தது மற்ற காவல்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.