Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இயற்கையான உணவு பொருள்… உடலுக்கு குளிர்ச்சியூட்டும் நுங்கு… ஜோராக நடைபெற்ற விற்பனை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் வெப்பத்தை சமாளிக்க மக்கள் ஆர்வமுடன் நுங்கை வாங்கி சாப்பிடுகின்றனர் . மே, ஜூன் மாதங்களில் வெயிலின் சூட்டை தணிக்கவும், மிகக் கடுமையான வறட்சியை தாங்குவதற்கும் வெள்ளரிப்பிஞ்சு தர்பூசணி, நுங்கு போன்ற குளிர்ச்சியை தரும் பொருட்களை வாங்கி சாப்பிட்டு ஓரளவு சூட்டை சமாளித்து வருகின்றனர்.

இதனையடுத்து மாவட்டத்தில் பனை மரங்கள் பராமரிப்பின்றி குறைந்து விட்ட நிலையிலும் அன்னவாசல், இலுப்பூர் ஆகிய கிராமங்களில் தற்சமயம் நுங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு நுங்கு விலை 10 ரூபாய் என சாலையோர கடைகளில் விற்கப்படுகிறது.

Categories

Tech |