திருமணம் குறித்த கேள்விக்கு ராஜா ராணி 2 சீரியல் நடிகர் சித்து பதிலளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ராஜா ராணி 2 சீரியல் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீரியல் Diya aur baati hum என்ற ஹிந்தி சீரியலின் ரீமேக் ஆகும். தற்போது ராஜா ராணி2 சீரியலில் சித்து கதாநாயகனாக நடிக்க ஆல்யா மானசா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் விஜய் டெலி விருதில் சித்துவிற்கு அறிமுக நாயகன் என்ற விருதும் ஆல்யாவுக்கு சிறந்த மருமகள் என்ற விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது .
நடிகர் சித்து விஜய் தொலைக்காட்சிக்கு வருவதற்கு முன் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஸ்ரேயாவும் சித்துவும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் எப்போது உங்களுக்கு திருமணம்? என்ற கேள்விக்கு சித்து ‘பொறுமையாக திருமணம் செய்து கொள்கிறோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் காதலித்துக் கொள்கிறோம்’ என கூறியுள்ளார்.