Categories
சினிமா தமிழ் சினிமா

வாழ்க்கையை கணிக்க முடியாது…. விவேக் குறித்து நயன்தாரா உருக்கமான பதிவு….!!!

முன்னணி நடிகை நயன்தாரா விவேக் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா விவேக் மறைவு குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பல ஆண்டுகளாக அவருடன் பணிபுரிந்த அற்புதமான நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். குறிப்பாக ‘விஸ்வாசம்’ படம். மிக விரைவாக நம்மை விட்டுச் சென்று விட்டார். நம்பமுடியவில்லை.

வாழ்க்கை கணிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பதை இது காட்டுகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை அவர்களுக்கு கடவுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |