Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி மையங்களை காட்டும் கூகுள் மேப்…. அசத்தல் அப்டேட்..!!

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது.

மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய சரியான தகவல்களை மக்களிடம் கொண்டும் சேர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி தடுப்பூசி முகாம்களுக்கு வழிகாட்ட கூகுள் தனது சர்ச் மற்றும் மேப்ஸ் சேவையில் புது அப்டேட் கொண்டுவந்துள்ளது. இந்த அப்டேட் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று கூறவேண்டும். கடந்த மாதம் இந்த கூகுள் நிறுவனம் தடுப்பூசி பற்றிய தகவல்களை மக்களிடம் எளிமையாக கொண்டு செல்லும் முயற்சியை தொடங்கியது. இப்போது கூகுள் மேப்ஸ், கூகுள் சர்ச் தளங்களில் மக்களுக்கு அருகாமையில் கிடைக்கும் தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. மேலும் முதற்கட்டமாக இதுபற்றிய தகவல்கள் அமெரிக்கா, பிரானஸ், சிலி, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த கூகுள் அப்டேட் அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |