Categories
சினிமா தமிழ் சினிமா

நீண்ட இடைவெளிக்குப் பின் இணைந்த பாரதி-கண்ணம்மா… வெளியான அழகிய புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் மற்றும் நடிகை இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் விருது விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது . இதில் பல பிரபலங்களுக்கு விருதுகள் கிடைத்தது . குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் அதிக விருதுகள் கிடைத்தது. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது .

இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் மற்றும் நடிகை இருவரும் தங்களது விருதுகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இருவரும் பாரதிகண்ணம்மா சீரியல் லுக்கில் உள்ளனர் . நீண்ட இடைவெளிக்குப் பின் இவர்கள் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |