ராணிப்பேட்டையில் ஒரே நாளன்று 111 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தற்போது மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் அதனை தடுப்பதற்கு பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இத்தொற்று பரவாமலிருக்க அரசாங்கம் பல முயற்சிகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது.
அந்த வகையில் ஒரே நாளன்று 111 நபர்களுக்கு தொற்று உறுதியானது. இதற்கிடையே தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் 738 நபர்களும், தனியார் மருத்துவமனையில் 254 நபர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.