Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்லை… தனியார் ஊழியருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் வசித்து வரும் சண்முகவேல் என்பவரது மகன் மணிகண்டன், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பங்களா பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முந்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பங்களா பேருந்து நிலையம் அருகே சென்ற போது அதே பகுதியில் வசித்து வரும் செங்கமலை என்பவரது மனைவி சந்திரா சாலையைக் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சந்திரா மீது மணிகண்டன் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

அதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் மணிகண்டனுக்கும், சந்திராவுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். சந்திராவுக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |