நாமக்கல் மாவட்டத்தில் சித்திரை முதல் நாளன்று ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்திரை மாதம் முதல் நாளன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சாமிக்கு 1008 வடமாலை சாத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் குடம் குடமாக பால், எண்ணெய் மற்றும் பஞ்சாமிர்தம் ஊற்றி சாமிக்கு அபிஷேகம் செய்துள்ளனர். மேலும் ஆஞ்சநேயர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.