மறைந்த நடிகர் விவேக்கின் இலட்சியத்தை தனிப்பட்ட முறையில் தான் நிறைவேற்ற போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்பி சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர் விவேக் மாரடைப்பினால் மருத்துவமனையில் மரணமடைந்தார். இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்காக ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு விட வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதன்படி விவேக் “கிரீன் கலாம்” என்ற அமைப்பைத் தொடங்கி தற்போது வரை 33 லட்சம் மரங்களை நட்டிருக்கிறார்.
எனவே இலட்சியத்தை அடைய மேலும் பல லட்சம் மரக்கன்றுகளை நடவேண்டும் என்ற நிலையில் அவர் உயிரிழந்ததால், அவரின் ஆசை இறுதி வரை கைகூடவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.பி சந்தோஷ் குமார் “கிரீன் கலாம்” என்ற திட்டத்தை நிறைவடைய செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.
Will make sure that his wish be fulfilled. Thiru Vivek’s goal was to plant 1 crore saplings and he already could reach up to 32.5Lakhs. I personally see that the remaining task of his #GreenKalam project be completed under our #GreenIndiaChallenge and dedicate to him.#RIPVivekh pic.twitter.com/MYGFWOf6p1
— Santosh Kumar J (@SantoshKumarBRS) April 17, 2021
இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் சந்தோஷ் குமார் குறிப்பிட்டிருப்பதாவது, “ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவது நடிகர் விவேக்கின் லட்சியம். அவர் தற்போது வரை சுமார் 32.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு விட்டார். “கிரீன் கலாம்” திட்டத்தில் மீதமிருக்கும் இலக்கை தனிப்பட்ட முறையில் நான் நிறைவேற்ற போகிறேன். “கிரீன் இந்தியா சேலஞ்ச்” அமைப்பின் கீழ் அது நிறைவேற்றப்படும். இது விவேக்கிற்கு சமர்ப்பணம்” என்று பதிவிட்டுள்ளார்.