கீர்த்தி சுரேஷ் படபிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் சர்காரு வாரி பாட்டா எனும் தெலுங்கு படப்பிடிப்பில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால் நடிகர், நடிகைகள் அச்சத்தில் உள்ளனர்.