Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இனி வேற பகுதிக்கு செல்ல வேண்டாம்…. மொத்தம் 1,235 படுக்கைகள்….மருத்துவ குழுவினர் தெரிவித்த தகவல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை அளிக்க 1235 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருவதால் தொற்றுடு பரவுவதை தடுக்க  அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 150 பேர் மட்டுமே அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் சேலம், கரூர் மற்றும் கோவை உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் மக்களின் நலன் கருதி நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் 110 படுக்கைகள் மற்றும் இதர மருத்துவமனையில் 246 படுக்கைகள், தனியார் மருத்துவமனையில் 319 படுக்கைகள் மேலும் சிறப்பு சிகிச்சை மையங்களில் 570 படுகைகள் என மொத்தம்  1,235 படுகைகள் தயார் நிலையில் உள்ளது என மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |