கொரோனா பரவலால் குமரியில் மட்டும் மூன்று நபர்கள் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று குமரியில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை மூன்று. அங்கு கொரோனா பரவலை தடுப்பதற்கான முயற்சிகளை மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திருவனந்தபுரத்தில் வசித்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பிறகு கர்ப்பிணி தாய் மற்றும் இளம் குழந்தை இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருக்கு கொரோனா சிகிச்சை அளித்தபோதும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் நேற்று உயிரிழந்தார். இதுபோன்று கொரோனா தோற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.