பிரபல தமிழ் நடிகை காஜல் அகர்வால் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜகவை சேர்ந்த முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67 வயது) கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் நேற்று இரவு திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல தமிழ் நடிகை காஜல் அகர்வால் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் வெளியுறவு துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் உடைய குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது இதயம் இரங்கல் தெரிவித்துள்ளது” அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Heart felt condolences to the family and loved ones of #SushmaSwarajji, our former external affairs minister. RIP.
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) August 7, 2019