திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள விட்டு கட்டி பகுதியில் சாலைகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக சாலையில் இருந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றும் பணி நடைபெற்றுள்ளது. அந்தபணியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் மற்றும் தமிழ்செல்வம் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் உயர் கோபுர மின் கம்பத்தை பொக்லின் எந்திரத்தில் உள்ள கயிறு மூலம் கட்டி மேலே தூக்கியுள்ளனர்.
அப்போது கயிறு அறுந்து மின்கம்பம் அருகிலுள்ள மின் உயர் மீது விழுந்து மின்சாரம் தாக்கி செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த தமிழ்செல்வத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து விபத்தில் இறந்த செந்தில் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.