ஈரோடு மாவட்டத்தில் கொரானா பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கொரானா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரானா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் அதிகம் செல்லக்கூடிய தெருக்கள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை உட்பட 36 காவல் நிலையங்கள், 4 மகளிர் காவல் நிலையங்கள் என மொத்தம் 40 காவல் நிலையங்கள் உள்ளன.
அந்த காவல்நிலையங்களில் 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணிபுரிந்து வருகின்றனர். எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனுடன் கிருமிநாசினி பவுடரும் தூவப்பட்டு காவல்நிலையங்கள் மிகவும் சுகாதாரமான முறையில் அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார பணியாளர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது.