திருவாரூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மகளின் கழுத்தை தந்தை அறுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு சத்யபிரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கணவர் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனனயடுத்து மகள் சத்யபிரியா தாயாருடன் வசித்து வரும் நிலையில் தனது குடும்ப அட்டை எடுப்பதற்க்காக தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு செல்வராஜ் மற்றும் மகள் சத்யபிரியா இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த தந்தை மகளின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளர். இதில் படுகாயமடைந்த சத்யபிரியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.