பெற்றோர் வீட்டு வேலை செய்யச் சொன்னதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஆர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிபட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வீட்டு வேலைகளை செய்யுமாறு பெற்றோர் கண்டித்ததால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.