Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“கொரோனா பரவல்” அதிகரிக்கும் பாதிப்பு…. அச்சத்தில் மக்கள்…!!

கொரானா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்வது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உள்ள கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அவ்வகையில் வேலூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதும் குறையவில்லை. இந்நிலையில் அந்த மாவட்டத்தில் மட்டும் 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

நேற்று மீண்டும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அறியப்பட்டது. இதுவரையில் வேலூர் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 21 ஆயிரத்து 791 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். 361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார்கள். 809 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |