குளித்துக்கொண்டிருக்கும் போது சேற்றில் சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காளிகான் கொட்டாய் பகுதியில் மோகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் குமாரன் செட்டி ஏரிக்கு குளிக்க சென்ற மோகன் சேற்றில் சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அருகிலிருந்தவர்கள் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மோகனின் உடலை சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். அதன்பிறகு மோகனின் உடலை கைப்பற்றிய மாரண்டஅள்ளி காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.