Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் தீவிரமடையும் இந்திய வகை வைரஸ்.. சிவப்பு பட்டியலில் இணைக்கப்படுமா இந்தியா..? வெளியான தகவல்..!!

பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் இந்தியா இணைக்கப்படுமா என்பது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் தற்போது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸால் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து நாடுகளில் தற்போது வரை 70க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் அவர்களில் அதிகமானோர் சமீபத்தில் பிற நாடுகளுக்கு சென்று வந்ததாக ஆதாரங்கள் எதுவும் இல்லை.

எனினும் இந்தியாவில் பரவிய கொரோனா அவர்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை நாட்டையே புரட்டிப் போட்டு வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது.

இந்நிலையில் பிரிட்டனிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியதால், இந்திய வகை “Double Mutant” கொரோனாவின் தன்மை, வீரியம் மற்றும் தடுப்பூசியால் இதனை கட்டுப்படுத்த முடியுமா? என்பது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் இந்தியா இடம்பெறுமா? என்பது விரைவாக தீர்மானிக்கப்படும் என்று மருத்துவர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் பிரிட்டனில் தடுப்பூசி செலுத்த துவங்கியதிலிருந்து தொற்று எண்ணிக்கை பலமடங்காக குறைய தொடங்கியது. எனவே தற்போது பிரிட்டன் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |