Categories
தேசிய செய்திகள்

#ResignModi – ட்ரெண்டிங்… நாடு முழுவதும் பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாத பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டுமென ட்விட்டரில் #ResignModi என்ற ஹேஸ்டேக்கை நெட்டிசன்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். ஆக்சிஜன் பாதிப்பு மற்றும் வெண்டிலேட்டர் தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் உயிரிழப்பு, 2 வது கொரோனா அலைக்குமோடி தயாராகவில்லை என பல்வேறு கருத்துக்களை இந்த ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |