Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல மொத்தம் 100 கோடி… ஏற்றுமதி செய்வதில் சிக்கல்… விசைத்தறி தொழிலாளர்களின் முடிவு…!!

100 கோடி மதிப்பிலான துணிகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்க நிலையில் உள்ளதால் உற்பத்தியை குறைத்துள்ளதாக விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள லக்காபுரம், சோலார், சித்தோடு போன்ற பகுதிகளில் ரயான் ரக துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இங்கிருந்து டெல்லி, மத்திய பிரதேஷ், குஜராத், கல்கத்தா, மராட்டியம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு ஒரு நாளைக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரானா பாதிப்பு அதிகமாக உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர் கிடைப்பது மிகவும் அரிதாகயுள்ளதாக  விசைத்தறியாளர்கள் கூறியுள்ளனர்.

மேலும் டெல்லி,குஜராத்,மராட்டியம், கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர கொரானா ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி சார்ந்த பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணம் பெறுவதில் சிக்கல் உள்ளதாகவும் விசைத்தறி தொழிலார்கள் கூறியுள்ளனர். இதனால் ஈரோட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய சுமார் 100 கோடி  ரூபாய் மதிப்புள்ள துணிகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்க நிலையில் உள்ளது. எனவே துணி உற்பத்தியை குறைத்து உள்ளதாக விசைத்தறி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |