நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். தற்போது நடிகை கீர்த்தி அண்ணாத்த, சாணிக் காயிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் .
சமீபத்தில் கீர்த்தி தெலுங்கு நடிகர் நிதினுடன் இணைந்து நடித்த ரங் தே திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த புகைப்படம் விளம்பரப் படத்திற்காக எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.