மீன் மார்க்கெட் மூடப்பட்டதால் இறைச்சி மற்றும் காய்கறி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் கொரானா தொற்றின் தாக்கம் அதிகம் இருப்பதால் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஈரோடு மாவட்டம் ஸ்டோனி பாலம் மற்றும் காவிரி ரோட்டில் அமைந்துள்ள மீன் மார்க்கெட் செயல்பட கூடாது என உத்தரவிடப்பட்டது.
இதனால் ஆடு, கோழி போன்ற இறைச்சி கடைகளில் இறைச்சி பிரியர்கள் வரிசையில் நின்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றுள்ளனர். மேலும் ஈரோடு வா. உ .சி மைதானத்தில் உள்ள காய்கறி சந்தையிலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியுள்ளது..