விஜய் டிவி சீரியல் நடிகைகள் 3 பேர் அம்மன் வேடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் ஒவ்வொரு சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் விஜய் டெலி விருது மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 உள்ளிட்ட பல சீரியல் நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி சீரியல் நடிகைகள் 3 பேர் அம்மன் வேடமிட்டு நடனமாடி அசத்தி இருந்தனர். இந்நிலையில் அந்த 3 சீரியல் நடிகைகள் அம்மன் வேடத்தில் எடுத்துக்கொண்ட கலக்கலான புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் பாரதிகண்ணம்மா ரோஷினி, மௌனராகம் ரவீனா, செந்தூரப்பூவே ஸ்ரீநிதி ஆகிய மூவரும் உள்ளனர்.