Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி கனி வீட்டிற்கு சென்ற பிரபல நடிகர்கள்… யார் யார் தெரியுமா?… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி வீட்டிற்கு நடிகர் சிம்பு மற்றும் நடிகர் மகத் இருவரும் சென்றுள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்றுவந்தது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கனி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். டைட்டில் வின்னர் கனி பிரபல இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளும் இயக்குனர் திருவின் மனைவியும் ஆவார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே கனி மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல் விளையாட்டு என்னும் நேரடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இதையடுத்து இவர் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக சமைத்து டைட்டில் வின்னராக மகுடம் சூட்டினார் . இந்நிலையில் கனியின் வீட்டிற்கு நடிகர் சிம்பு, நடிகர் மகத் மற்றும் தொகுப்பாளர் ரக்சன் ஆகியோர் சென்றுள்ளனர் . அப்போது அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கனியின் கணவர் திரு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

Categories

Tech |