Categories
மாநில செய்திகள்

இந்த 1 மாவட்டத்தில் மட்டும்…. கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு – அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அதே நேரத்தில் தொழில் மற்றும் வணிகம் தொடர்பாக வருபவர்கள் உரிய ஆவணம் காண்பித்து வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |