நாடு முழுதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.