பெங்களூருக்கு கடத்த முயற்சித்த 5 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்ட அலுவலரான பானுவுக்கு தொலைபேசி வாயிலாக ரேஷன் அரிசியை கடத்தப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பறக்கும் படையின் உதவியுடன் பள்ளிகொண்டான் சுங்கச்சாவடியில் தீவிர சோதனை பணி நடத்தப்பட்டது. அப்போது லாரி ஒன்றில் 5 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் வெற்றிவேல் மற்றும் தினேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தபோது, காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூருக்கு அரிசியை லாரியில் கடத்துவதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பிறகு கடத்தி செல்லப்பட்ட அரிசி வேலூர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.