ஸ்விட்சர்லாந்தில் இன்றிலிருந்து சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தில் புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதன்படி மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு உள்ளே மட்டுமல்லாமல் வெளியில் மற்றும் மாடிதளங்களிலும் பொதுமக்கள் அமர்ந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று விளையாட்டு மைதானங்கள், திரையரங்குகள் போன்றவற்றிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி செலுத்தும் திட்டமானது, ஜெனிவா விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் பெரிய அரங்கம் ஒன்றில் இன்று நடக்கிறது. இந்த அரங்கில் சுமார் 3000 முதல் 4000 நபர்கள் வரை அமரலாம். மேலும் இன்றிலிருந்து சுவிற்சர்லாந்து அரசு, பிரான்சில் உள்ள Region Bretagne, Region Nouvelle-Aquitaine மற்றும் ஜெர்மனின் Land Sachsen, இத்தாலியில் உள்ள Region Pugliya போன்ற பகுதிகளை ஆபத்தான நாடுகள் பட்டியிலில் சேர்த்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட இந்த பகுதிகளிலிருந்து வரும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு உறுப்பினர்கள் பெடரல் கவுன்சிலில் இணைக்கப்பட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஜூலை மாதத்திலிருந்து 1000 நபர்கள் வரை கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் Alaian Bersest கூறியுள்ளார். மேலும் செப்டம்பர் மாதத்திலிருந்து சுமார் 5000 நபர்கள் வரை கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.