பெரம்பலூரில் வாகனம் மோதி மொபட் விபத்துக்குள்ளானதில் வி.சி.க. பிரமுகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்தார். இவர் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவையில் பதவி வகித்தார். இந்நிலையில் இவர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே நேற்று அதிகாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக சீனிவாசன் சென்று கொண்டிருந்த மொபட்டின் மீது வேகமாக மோதியது.
மேலும் அந்த வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசன் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் காவல் துறையினர் சீனிவாசனின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சீனிவாசனின் மனைவி சித்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.