விஜய் தொலைக்காட்சியில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் சீசன் 3 ஆரம்பமாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சிகளில் ஒன்று Mr & Mrs சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் தங்களது நிஜ ஜோடிகளுடன் கலந்து கொண்டு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை விளையாடுவார்கள்.
திரும்பி வந்துட்டோம்னு சொல்லு!..
Mr & Mrs சின்னத்திரை சீசன் 3 – ஏப்ரல் 24 முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவியில்.. #MrMrsChinnathirai #VijayTelevision pic.twitter.com/eS2Z5BT4lf
— Vijay Television (@vijaytelevision) April 19, 2021
இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சின்னத்திரை சீசன் 3 ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 24 முதல் சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்தமுறை இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் மாகாபாவுடன் இணைந்து அர்ச்சனாவும் தொகுத்து வழங்க இருக்கிறார் . மேலும் இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.