Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சமூக வலைதளங்களில் இதை வெளியிடாதீங்க..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்… வனவர் எச்சரிக்கை..!!

வன உயிரினங்களை திருவிழா என்ற பெயரில் வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவர் எச்சரித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா மற்றும் பல்வேறு பகுதிகளில் முயல் வேட்டை திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அப்போது வனத்துறைக்கு பலரும் முயல்களை வேட்டையாடுவதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரையடுத்து வனவர் பாண்டியன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயல்வெளி பகுதிகள் மற்றும் வன காப்பு காடுகளில் வன உயிரினங்களான முயல், மான், மயில், கவுதாரி, பூனை, காட்டு பன்றி ஆகியவை வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

திருவிழா என்ற பெயரில் வன உயிரினங்கள் மற்றும் முயல் ஆகியவற்றை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டால் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வன உயிரினங்கள் சித்திரவதை செய்யப்படுவது, வேட்டையாடப்படுவது போன்ற காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |