நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு எதிரான போட்டியில் , ஆர்சிபி வீரர் சஹாலின் மனைவி தனஸ்ரீ வெர்மா உணர்ச்சிவசத்துடன் காணப்பட்டார் .
நேற்று நடந்த 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆர்சிபி அணி 36 ரன்கள் வித்தியாசத்தில், கொல்கத்தா அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது .இந்த போட்டியின் போது , ஆர்சிபி அணியின் சுழல் பந்து வீச்சாளரான சஹாலின் மனைவியான தனஸ்ரீ வெர்மா மிகவும் உணர்ச்சிவசத்துடன் கண்கலங்கினார்.
இவர் கண்கலங்கிய இதற்கு காரணமாக இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் தொடக்க ஆட்டத்தில், சஹால் சிறப்பாக விளையாடவில்லை. இதற்கு முன் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் விக்கெட்டுகள் எடுக்கவில்லை. அதோடு அவர் ஓவரில் வீசிய பந்துகள் ,அதிக ரன்களை குவித்தனர். இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் சாகர் முக்கிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கைப்பற்றினார். இதன்காரணமாக அவர் மனைவி கண்ணீருடன் , கடவுளுக்கு நன்றி செலுத்தி உள்ளார்.
https://twitter.com/pant_fc/status/1383999351064698882