Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால ரொம்ப கஷ்டப்படுறோம்..! சீக்கிரம் நடவடிக்கை எடுங்க… தூய்மை பணியாளர்கள் கோரிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் பள்ளிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்தல், பள்ளிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட வேலைகளை தூய்மைப் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் உயர்நிலைப்பள்ளியில் வேலை செய்பவர்களுக்கு ரூ.2,500, மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்பவர்களுக்கு ரூ.3000, தொடக்கப் பள்ளியில் வேலை செய்பவர்களுக்கு ரூ. 2000 வரை சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த சம்பளம் அந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக ஒன்றிய அலுவலகத்திலிருந்து தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து ஒரு வருடமாக இந்த சம்பளம் வழங்கப்படவில்லை.

ஆனால் பள்ளிகள் மட்டும் ஓரிரு மாதங்கள் தவிர மற்ற மதங்களில் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் ரூ.100, ரூ.200 வரை கொடுத்து சம்பளம் வழங்கப்படாததால் உதவி செய்கின்றனர். ஆனால் இதுவரை அரசு வழங்கும் சம்பளம் அவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. மேலும் தூய்மை பணியாளர்கள் ஓராண்டாக சம்பளம் இல்லாமல் வறுமையில் தவிக்கின்றனர். கொரோனா காலகட்டத்தில் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |