Categories
தேசிய செய்திகள்

நொடிப்பொழுதில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்…. பதறவைக்கும் வீடியோ காட்சி..!!

மரணத்தின் விளிம்பிற்கு சென்ற ஒரு குழந்தையை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ரயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வாங்கினி என்ற ரயில் நிலையத்தின் இரண்டாவது பிளாட்பாரத்தில் ஒரு பெண் தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக அந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தது. அதேசமயம் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது.

என்ன செய்வது என்று தெரியாமல் தாய் பதறி நிலையில், அங்கு பணியாற்றிய ஊழியர் மயூர் ஷெல்கே என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிவந்து நொடிப்பொழுதில் அந்த குழந்தையை காப்பாற்றினார். அவர் உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது . தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |