சிறுநீரக கல் வராமல் இருக்க தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரினை அருந்த வேண்டும். மேலும் அதற்கான சில சித்த மருத்துவ முறைகளை காணலாம்.
எலுமிச்சையுடன் துளசியினை சேர்த்து தேனீர் செய்து அருந்தலாம்.நெருஞ்சில் விதையுடன் கொத்தமல்லி விதை சேர்த்து காய்ச்சி இரண்டு வேளை குடித்து வர சிறுநீரக கல் காணாமல் போகும் .
வெள்ளரி விதையுடன் சோம்பு சேர்த்து அரைத்து , தேனீர் செய்து அருந்தி வர நல்ல முன்னேற்றம் தெரியும். ஓமம் மற்றும் மிளகினை சம அளவு சேர்த்து வெள்ளம் சேர்த்து அரைத்து தினமும் உண்டு வரவேண்டும்.
நன்னாரி வேருடன் நீர் சேர்த்து காய்ச்சி அதில் சிறிது கடுக்காய் தூள் சேர்த்து உண்ணலாம் .வாழைத்தண்டை சமைத்து சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் கரையும்.
தர்பூசணி பழம், சுரைக்காய், வெங்காயம், வெள்ளரி, இளநீர்,அன்னாசி, எலுமிச்சை, பப்பாளி, கேரட், பீர்க்கங்காய், நாவல் பழம், வாழை, மஞ்சள், வெண்பூசணி போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். முருங்கை வேர்பட்டையில் கஷாயம் செய்து குடித்து வர சிறுநீரக கற்கள் கரையும்.
அருகம்புல் மற்றும் மிளகினை சேர்த்து தேனீர் அருந்தி வந்தால் நல்ல முன்னேற்றம் தெரியும் .முள்ளங்கி சாறு பருக சிறுநீரக கோளாறு காணாமல் போகும் .