மயிலாடுதுறை அருகே இடத்தை விற்பது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவியை மோசமாக தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்லவராயன் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று தனக்கு சொந்தமான இடத்தை பாலகிருஷ்ணன் தனது சகோதரருக்கு விற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதனை அறிந்த அவரது மனைவி அனிதா எதற்காக இடத்தை விற்பனை செய்கிறீர்கள் ? என்று கணவர் பாலகிருஷ்ணனிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த இடத்தை விற்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதனால் பாலகிருஷ்ணனுக்கு, வனிதாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வனிதாவை, பாலகிருஷ்ணன் மோசமாக தாக்கியுள்ளார். அதில் வனிதாவின் தலை பகுதியில் மோசமான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து வனிதா சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வனிதா மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.