ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பை பலப்படுத்த மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு தகுதி ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் தொடர்ந்து போராட்ட்டங்கள் மற்றும் அசாதாரண சூழல் நிலவுவதால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மதுரை விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை புறநகர் திண்டுக்கல் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் விமான நிலையம் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அசாம்பாவிதம் ஏதும் அதிரடிப்படை வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்