Categories
அரசியல் மாநில செய்திகள்

சனியம் புடிச்சவுங்களுக்கு….. தம்பி சூரி ஸ்டைலில் பதிலடி…. சீமான் மாஸ் ஸ்பீச் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்,  வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரந்தை எடுத்துச் சென்று விட்டதால் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 548வாக்குகளுக்கு, வெறும் 180வாக்குகள் தான் பதிவாகியுள்ளது என்ற கேள்விக்கு, இந்த சனியம் புடிச்சவுங்களுக்கு ஓட்டை போட்டு என வெறுத்து விட்டார்.இந்த தேர்தல் வாக்குப்பதிவு குறைவாக இருப்பதற்கு இரண்டு பேரையும் வெறுத்து விட்டார்கள். அவர்களால் கல்லை எடுத்து எரிய முடிய வில்லை, கட்டை எடுத்து அடிக்க முடியவில்லை, பேசாமல் கையை கட்டி கொண்டு ஓட்டுப் போடாமல் இருந்து விடுகிறோம் என்பது தான் நடந்துள்ளது.

மூன்றாவது இடத்திற்கு நாம் தமிழர் கட்சி வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கேட்ட போது, ஏன் முதல் இடத்திற்கு நான் வந்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவீர்களா…? மூன்றாவதாக வந்து கொண்டு இருக்கின்றோம். வெறும் 4 காலடி  தான்… நான் வேகமாக ஓடக்கூடிய ஆளு . சிறுவயதிலிருந்து ஓடி பயிற்சி எடுத்தவன், நான்கு அடிதான்  எடுத்து வைத்தால் நான் தான் முதலில் வருவேன்.புதிதாக அமையக்கூடிய அரசு… நீங்களாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி முதல்கட்டமாக எதை  செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள் ? என்ற கேள்விக்கு,

நான் வந்தால் தம்பி பரோட்டா சூரி சொல்வது மாதிரி….  அழித்து ஆடுபவன். முதலில் இருந்து இதை அழிப்பா….  எல்லாரும் வேடிக்கையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 6 லட்சம் கோடி கடனுக்கு வந்ததும் மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பேன் என்று சொல்கிறேன் சிரிக்கிறான்…. கருணாநிதி, ஜெயலலிதா வாங்கிய கடன்களுக்கு  எல்லாம் நான் கையெழுத்து போட்டு கொடுக்க முடியாது. இது என் அரசு…  வாங்கியவனின் வாரிசு இருக்கிறது, கேட்டு  வசூலித்துக்கொள்.

இது ஏன் அரசு…. ஒரு ரூபாய் வாங்கினாலும் நான் பொறுப்பேற்கிறேன். என் மக்களுக்கு இந்த கடன் சுமையை ஏத்த முடியாது நான் கொடுக்க மாட்டேன். நான் வேற லெவலில் ஆட வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஆட்டத்தை பொறுத்திருந்து பாருங்கள்…. இப்பவே சொன்னால் அதில் இன்ட்ரஸ்ட் இருக்காது.

முதல் கட்டமாக என் மக்களுக்கு இருக்கிற பெரிய சிக்கல் அறிவை வளர்க்கும் கல்வியும், உயிரை காக்கும் மருத்துவமும் பெரிய சந்தையாகி போனது பெரிய துயரம். உலக உயிர்களின் உயிர் தேவையாக இருக்கின்ற குடிநீர் விற்பனைக்கு வந்தது ஒரு துயரம். இவை மூன்றையும் வியாபாரப் பொருட்களாக உருவாக்கிய நாடு நாடு அல்ல நகரம், இது தான் என்னுடைய புரிதல்.

அதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். இதனை அடிப்படியில் இருந்து மாற்ற வேண்டும் என நினைக்கின்றேன், ஒவ்வொன்றாக சரி செய்வேன். ஐந்து ஆண்டுகளுக்குள் அந்த அடிப்படையை சரியாக செய்து, அடித்தளத்தை சரியாக போட்டுவிடுவேன் என்று நான் நம்புகிறேன். ஈழம் அடைவது இப்போ சொல்லமுடியாது, வந்ததும் என்ன பண்ணுறேன்னு பாருங்க என சீமான் தெரிவித்தார்.

Categories

Tech |