Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS RR : ராஜஸ்தானுக்கு 189 ரன்களை… வெற்றி இலக்காக நிர்ணயித்த சிஎஸ்கே…!!!

12 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ்   அணிகள்  மோதல் .

14வது  ஐ.பி.எல் தொடரின் ,12 வது லீக் போட்டியில் , சென்னை சூப்பர் கிங்ஸ் -ராஜஸ்தான் ராயல்ஸ்   அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கண்டே மைதானத்தில், இன்று  தொடங்கியது  . இதில்  டாஸ் வென்ற  ராஜஸ்தான் ராயல்ஸ்  அணி  பவுலிங்கை  தேர்வு செய்துள்ளது.சிஎஸ்கே  அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெட்வாக்  –  டு பிளெசிஸ் களமிறங்கினர் . இதில் ருதுராஜ் கெட்வாக் 13 பந்துகளில் ,10 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மொயின் அலி களமிறங்கினார் .இதன் பின் டு பிளெசிஸ் அதிரடி ஆட்டத்தை காட்டினார். இவர் 17 பந்துகளில் , 4 பவுண்டரி ,2 சிக்ஸர்களை அடித்து, 33 ரன்களில் வெளியேறினார் . அடுத்து சுரேஷ் ரெய்னா களமிறங்கினார் .மொயின் அலி , சுரேஷ் ரெய்னா இருவரும் சிறப்பான விளையாடினர் .

மொயின் அலி 20 பந்துகளில் , 1 பவுண்டரி ,2 சிக்ஸர்களை அடித்து ,26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய ராயுடு 3 சிக்ஸர்களை அடித்து ,27 ரன்னில் அவுட் ஆனார் .இதை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் 20 பந்துகளில் , 1 பவுண்டரி ,1 சிக்ஸரை அடித்து 26 ரன்களில் வெளியேறினார் .சிஎஸ்கே  அணி 14 ஓவரில்  5 விக்கெட்டை இழந்து 125 ரன்கள் குவித்தது .இதன் பிறகு களமிறங்கிய டோனி (18) ரன்கள் , ஜடேஜா (8) ரன்கள் , சாம் கர்ரன் (13) ரன்கள் மற்றும் தாகூர் (1 )ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .இறுதியாக ப்ராவோ ஆட்டமிழக்காமல் , 8 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 1    சிக்ஸரை அடித்து ,20 ரன்களை எடுத்தார் .20 ஓவர் முடிவில்,  சிஎஸ்கே  அணி 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை குவித்துள்ளது . அடுத்து 189 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியுள்ளது .

Categories

Tech |