தேனியில் சேதமடைந்திருக்கும் மின்கம்பத்தால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பெருமாள்புரம் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் கும்பக்கரை அருவிக்கு போகும் ரோட்டில் 3 மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. அந்த மின்கம்பங்களில் உயர் மின்னழுத்தம் கொண்ட கம்பிகள் செல்கிறது. இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கிறது. இதனால் மின்கம்பங்கள் திடீரென்று அறுந்து விழுந்தால் மோசமான விபத்து ஏற்படும். எனவே சேதமடைந்திருக்கும் மின் கம்பத்தை மாற்ற மின்வாரியத் துறையினர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.