Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் பாஜகவின் அடிமைகள் அல்ல…. பொங்கி எழுந்த அமைச்சர் ….!!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என திருமலையில் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆருடம் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலின் சோசியல் மீடியா வில் தான் முதலமைச்சராக பதவி வகிப்பார் எனவும் தெரிவித்தார். மேலும், ஆட்சி மாற்றத்திற்கு எல்லாம் வாய்ப்பு கிடையாது. அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியை கைப்பற்றும். மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெற்று எடப்பாடியார் முதலமைச்சராக பொறுப்பேற்பார்.

அம்மாவுடைய ஆட்சிதான் தொடர்ந்து நடைபெறும். தமிழகத்தில் அதிமுக பிஜேபியின் அடிமைகள் என்பது வேலையற்றவர்களின் வீண் பேச்சுக்கள்,  நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. அண்ணா திமுக தொண்டர்கள் யாருக்கு அடிமையாக எப்போது இருந்து கிடையாது. அதிமுக  சுயமாக சிந்தித்து செயலாற்றக் கூடிய மிகப்பெரிய அற்புதமான இயக்கம், தொண்டர்கள் பலங்கொண்ட இயக்கம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Categories

Tech |