Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதோட அளவை குறைச்சிட்டாங்க…. ரோந்தில் வனத்துறையினர்…. தேனியில் பரபரப்பு….!!

தேனியில் ரோந்து செல்லும் வனத்துறையினரின் வாகனங்களுக்கு டீசல் ஒதுக்கீட்டின் அளவு குறைக்கப்பட்ட சம்பவம் அவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் மேகமலையின் வன உயிரினங்கள் சரணாலயத்தில் புலி, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உட்பட சில விலங்குகள் உள்ளன. மேலும் இந்தப் பகுதியில் தீத்தடுப்பு, குற்றச் சம்பவங்கள் வனவிலங்குகளை கண்காணிக்க சில வனச்சரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த வனச்சரகத்திற்குட்பட்ட இடங்களில் வனத்துறையினர்கள் ரோந்து செல்வதற்காக வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் டீசலின் அளவு தற்போது 70 லிட்டராக குறைந்துள்ளது. இதனால் வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |