Categories
சென்னை மாவட்ட செய்திகள்

50%சலுகை விலையில் பிரியாணி…! கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள்… வேளச்சேரியில் காற்றில் பறந்த சமூக விலகல் …!!

சென்னைவேளச்சேரியில் பிரியாணி கடை ஒன்றில் திறப்புவிழா சலுகை அறிவிக்கப்பட்டதால் சமூக இடைவெளி இன்றி பொதுமக்கள் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியில் தனியார் பிரியாணி கடை ஓன்று புதிதாக திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக ஐம்பது சதவீதம் தள்ளுபடி அறிவித்திருந்தனர். இதனை அறிந்த பொதுமக்கள் காலைமுதலே கடையின் முன்பு கூட ஆரம்பித்தனர். மக்கள் கூட்டம் அதிகரித்ததால் தகவல் அறிந்து அங்க சென்ற மாநகராட்சி அதிகாரிகள் கடையை மூடும்படி அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் பொருளா பரவவில்லையா ? இப்போது மட்டும் பரவுமா ? என அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |