சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டி வான்கடேவில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவுசெய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர் கெயிக்வாட் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து ஐந்து ஓவரில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 ரன்களை சேர்த்த டூப்ளசிஸ் அடுத்த ஓவரில் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின் அதிரடியாக ஆடிய மொயின் அலி 26 ரன்களிலும், ரெய்னா 15 ரன்களிலும் , ராயுடு 27 ரன்களிலும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக தன் 200வது போட்டியில் களமிறங்கிய தல தோனி 18 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். கடைசி ஓவரில் சாம் கரன் 13 ரன்களிலும், ஷர்துல் தாக்கூர் ஒரு ரன்னிலும் ரன் அவுட் ஆகினர்.
இருப்பினும் இன்னிங்ஸின் கடைசி பந்தில பிராவோ சிக்சர் அணிக்கு சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை எடுத்தது. பிராவோ எட்டு பந்துகளில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என 20 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் அணி தரப்பில் சர்க்காரியா மூன்று விக்கெட்டுகளும், மோரிஸ் இரண்டு விக்கெட்டுகளும், திவாட்டியா, முஸ்தாஃபிஸூர் ரகுமான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.