நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து நேற்று காலை 4.35 மணியளவில் காலமானார். அவருடைய இறப்புக்கு முன்னதாக அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இதையடுத்து நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்று நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டியளித்தார். இதையடுத்து கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது டிஜி பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அரசுக்கும் மருத்துவ அறிவியலுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூடியதாக கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் அளித்த புகாரின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.